Tuesday, January 10, 2012

மனதில் தோன்றும் முறையற்ற பால் உணர்வை எதிர்கொள்வது எவ்வாறு?

Answer :- சராசரி மனிதர்கள் இதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை, ஆனால் ஆன்மிக வழியில் பயணிப்பவர்களில் பலர் இதை ஓர் அடிப்படைப் பிரச்சினையாகவும், அன்றாடப் பிரச்சினையாகவும் எதிர்கொள்கின்றனர்.

மனத்தை பொறுத்தவரை முறையானது, முறையற்றது என எதுவும் கிடையாது. இயற்கையில் எல்லா உயிரினங்களுக்குமே இந்த ஈர்ப்பு உணர்வு உண்டு. அது போன்றுதான் நமக்கு ஏற்ப்படும் பால் உணர்வும்.
எல்லா உணர்வுகளும் தோன்றி மறையும் தருவாயிலேயே நம்மால் அடையாளம்கண்டு கொள்ளபடுகிறது. மனத்தில் தோன்றும் இந்த ஈர்ப்பு உணர்வை குற்ற உணர்ச்சியாக எடுத்துக்கொள்ளதேவையில்லை. அவற்றின் ஆயுள் ½ வினாடியே, இது போன்ற உணர்வே நமக்கு வரக்கூடாது என்று போராடும்போது தான் மறையும்தருவாயில் இருக்கும் உணர்வை மீண்டும் புதுபித்து விடுகிறோம். “இந்த உணர்வுதான் வரவேண்டும்” “இந்த உணர்வு வர கூடாது” என்ற எந்த விதிமுறையும், கட்டுப்பாடும் மனதிற்கு கிடையாது. ஆனால் புறத்தில் நமது செயல் முறையானதாக இருக்கவேண்டும். ஒழுக்கங்களை கடைபிடிக்கவேண்டும்.
மனம் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை புரிந்துகொண்டாலே போதும். தன்னையே எதிர்த்துப் போராடிய மனம், போராடாத மனமாக மாறிவிடுகிறது. போராடாத மனத்தில் எந்த உணர்வும் தங்கியிருக்கபோவதில்லை. உணர்வு பிரவாகமாகவே மாறிவிடுகிறது. இதைத்தான் “ Liberated mind ” 

விடுதளையுற்ற மனம் என்று சொல்லுகிறோம். விடுதலையுற்ற மனத்தில், உணர்வுக்கும் புறச்செயலுக்கும் இடையே ஓர் இடைவேளி தோன்றிவிடும். 

உணர்வை எதிர்த்து போராடாதபோது, புறச்செயல் நம் கட்டுப்பாட்டில்தான் இருக்கும்.

No comments:

Post a Comment